Deva Samathanam Kirubaiye தேவ சமாதானம் கிருபையே தேவ

தேவ சமாதானம் கிருபையே தேவ
Unknown
PPT
Lyrics

Lyrics

தேவ சமாதானம் கிருபையே தேவ சந்தோஷமும் நிறைவாயே தேவாசீர் வாதங்கள் தங்கிடவே தேவன் அருள் ஈவாரே 1. ஆணிக் கடாவின கரமதே அன்புடன் உன்னை அணைக்கின்றதே வல்லமை உன்மீதில் பாய்ந்திடவே கர்த்தர் வலங்கை நீட்டுகின்றார் 2. இத்தனை ஆண்டுகள் சுமந்தாரே இன்றைக்கும் உன் இயேசு மாறிடாரே கலங்காதே திகையாதே என் உள்ளமே கர்த்தர் துணை நிற்கிறார் 3. தேவ சித்தம் என்றும் செய்திடுவாய் தேவ குமாரன் உன்னோடிருப்பார் உன்மேல் தன் கண்வைத்து ஆலோசனை தந்து உன்னை நடத்திடுவார் 4. கன்மலை மேல் வீட்டைக் கட்டுவாயே கர்த்தரின் கற்பனை கைக்கொள்வாயே உத்தம சாட்சியாய் நின்றிலங்குவாயே ஊழியம் செய்குவாயே 5. நல்ல தீர்க்காயுள் பெருகிடவே நித்திய ஜீவனும் பெற்றிடவே பக்தர்கள் பந்தியில் பங்கடைந்திடவே பரன் தயை புரிவார் 6. வாழ் நாளெல்லாம் களி கூர்ந்திடவே வாடாத கிருபை ஈந்திடுமே கிருபை கிருபை என்றென்று முள்ளதே கர்த்தனை வாழ்த்திடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4466
Song ID
deva-samathanam-kirubaiye-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open