Deva Thirusuthan Yesu தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்
தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்
Lyrics
தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்,
சாப சர்ப்பந் தலை சாக மிதித்தார்
சரணங்கள்
1. பேய்த் திரளோடே, வாய்த்திரள் பாட,
பெத்லகேம் என்னும் பெரும்பதி நாட – தேவ
2. தூயர் கொண்டாட, ஆயர்கள் தேட,
தீயன் ஏரோது மனம் மிக வாட – தேவ
3. தின்மைகள் மாற நன்மைகள் ஏற
தொன்மறை வாக்கியமே நிறைவேற – தேவ
4. பாவம் இரத்தாம்பரம் போற் சிவப்பாயினும்
பாலிலும் வெண்மையாக்குவதற்காய் – தேவ
5. இரட்சண்யக் கொடிகள் எங்கெங்கும் பறக்க
இரட்சகர் இராட்சியமெங்கெங்கும் சிறக்க – தேவ
6. வானவர் புகழ ஈனர்கள் இகழ
மகிலத் தடியவர் அகம் மிக மகிழ – தேவ
Details
- Numeric ID
- 7219
- Song ID
- deva-thirusuthan-yesu-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0
- Source
- Open