Devakumaran Uyirthelunthar தேவகுமாரன் உயிர்த்தெழுந்தார்
தேவகுமாரன் உயிர்த்தெழுந்தார்
Lyrics
தேவகுமாரன் உயிர்த்தெழுந்தார்
தேவ தூதர் ஆர்ப்பரித்தார்
அல்லேலூயா அல்லேலூயா
ஜெயதொனி வானில் கேட்கின்றதே
1. மரணத்தை ஜெயமுடன் ஜெயித்தெழுந்தார்
மாந்தரின் நிந்தையை நீக்கி விட்டார்'
கர்த்தனை சேரும் கிருபை பெறவே
நித்திய பாதையும் காட்டினாரே
2. நித்திரை அடைந்தோரில் முதற்பலனாய்
நீதிபரன் இயேசு உயிர்த்தெழுந்தார்
சத்திய வாக்கு நிறைவேறிடவே
உத்தமர் இயேசு உயிர்த்தெழுந்தார்
3. இரட்சணிய அடையாளம் அளித்து விட்டார்
இரட்சகர் வல்லமை நம் சொந்தமே
நல் விசுவாசம் நமக்கு அளிக்க
நிமலன் நம் இயேசு உயிர்த்தெழுந்தார்
4. மரணத்தின் கூரினை உடைத்தெறிந்தார்
மகிமையாய் இயேசு ஜெயித்தெழுந்தார்
பாவியின் பழியை நீக்கிடவே
பரமன் நம் இயேசு உயிர்த்தெழுந்தார்
5. காகளம் தொனிக்கையில் மாறிடுவோம்
இயேசுவின் சந்நிதி சேர்ந்திடுவோம்
மரித்தவர் உயிர்த்து எழும்பிடுவாரே
பரனோடு நிதமும் வாழ்ந்திடுவார்
Details
- Numeric ID
- 5815
- Song ID
- devakumaran-uyirthelunthar-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0
- Source
- Open