Devan Illai Endru தேவன் இல்லை என்று

தேவன் இல்லை என்று
Unknown
PPT
Lyrics

Lyrics

தேவன் இல்லை என்று சொல்லும் மானிடரே வாரும் தேவனை நான் காட்டுகின்றேன் ஜெப போரில் சேரும் ஐம்புலன் அறிவாலே அறிந்திட முடியாது அன்னை சொல்லாவிடில் தந்தை யார் தெரியாது ஆண்மையில்லாதவர்க்கு வாரிசு இல்லை ஆன்மா குருடருக்கு ஆண்டவன் இல்லை ஆன்மா குருடருக்கு ஆண்டவன் இல்லை – தேவன் உயிருக்குள் உயிராகி உறைந்தவர் இயேசு அவர் ஒருவர் இல்லை என்றால் நான் வெறும் தூசு ஜீவ பலியாக வந்த இயேசுவை பாரு ஜெகமதில் அவர் இன்றி வேறு தெய்வம் யாரு ஜெகமதில் அவர் இன்றி வேறு தெய்வம் யாரு – தேவன் புவி வாழ்க்கை என்பது போராட்டம் நிறைந்தது போராடி வென்றவரே புகழோடு வாழ்வாரே ஜெபப் போரில் ஜெயம் பெறுவோர் தேவனை காண்பாரே ஜெபமதை அறியார்கள் தேவனை அறியாரே ஜெபமதை அறியார்கள் தேவனை அறியாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8173
Song ID
devan-illai-endru-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open