Dhinamthorum Nantri Soluvean தினந்தோறும் நன்றி சொல்லுவேன்

தினந்தோறும் நன்றி சொல்லுவேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

தினந்தோறும் நன்றி சொல்லுவேன் என்னை காத்த உமக்கு அதிசயமாய் என்னை நடத்தும் அதிசயவான் உமக்கு அதிகாலை எழச்செய்தீர் உம்மைத் துதிக்க செய்தீர் நாள் முழுதும் கூட வந்தீர் எனக்கு முன்பாய் சென்றீர் பஞ்சத்திலும் என்னை நோக்கி காகத்தை அனுப்புகிறீர் அப்பத்துக்கும் தண்ணீருக்கும் குறைவே இல்லை காலியான குடங்கள் எல்லாம் எண்ணையால் நிரப்புகிறீர் நீர் என்னை போஷிப்பதால் கவலை இல்லை உம்மை முத்தம் செய்து முத்தம் செய்து நன்றி கூறுவேன் நானும் உம் பாதத்தை என் கண்ணீரினால் நனைத்து கழுவுவேன் உம்மை முத்தம் செய்து முத்தம் செய்து நன்றி கூறுவேன் நானும் உம்பாதம் பற்றி விலை உயர்ந்த தைலம் பூசிடுவேன் தினந்தோறும் நன்றி சொல்லுவேன் என்னை காத்த உமக்கு அதிசயமாய் என்னை நடத்தும் அதிசயவான் உமக்கு சுகம் தந்து பெலனும் தந்து உண்ண உணவும் தந்தீர் உடுத்த நல்ல உடையும் தந்தீர் அரவணைப்பும் தந்தீர் ஒன்றுக்கும் உதவாத களிமண்ணை போல் இருந்தேன் உமது கரத்தால் என்னை வனைந்தீரையா சங்கிலிகள் கட்டப்பட்ட பைத்தியம் போல் இருந்தேன் ஞானிகளை வெட்கப்பட வைத்தீர்ஐயா உம்மை முத்தம் செய்து முத்தம் செய்து நன்றி கூறுவேன் நானும் உம் பாதத்தை என் கண்ணீரினால் நனைத்து கழுவுவேன் உம்மை முத்தம் செய்து முத்தம் செய்து நன்றி கூறுவேன் நானும் உம்பாதம் பற்றி விலை உயர்ந்த தைலம் பூசிடுவேன் தினந்தோறும் நன்றி சொல்லுவேன் என்னை காத்த உமக்கு அதிசயமாய் என்னை நடத்தும் அதிசயவான் உமக்கு நான் தூங்க என்னை காக்க நீரோ தூங்குவதில்லை கடும் புயலின் நடுவிலும் சமாதான குறைவு இல்லை வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கின்றீர் பாதாளத்தில் படுத்தாலும் அங்கும் இருக்கின்றீர் நான் உம்மை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை உம்மை மறுதலித்தாலும் நீரோ மறுப்பதில்லை உம்மை முத்தம் செய்து முத்தம் செய்து நன்றி கூறுவேன் நானும் உம் பாதத்தை என் கண்ணீரினால் நனைத்து கழுவுவேன் உம்மை முத்தம் செய்து முத்தம் செய்து நன்றி கூறுவேன் நானும் உம்பாதம் பற்றி விலை உயர்ந்த தைலம் பூசிடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3756
Song ID
dhinamthorum-nantri-soluvean-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open