Ealaiyai Meeta Easuvea Swamy ஏழையை மீட்ட ஏசுவே சுவாமி
ஏழையை மீட்ட ஏசுவே சுவாமி
Lyrics
ஏழையை மீட்ட ஏசுவே சுவாமி
அடிமை சரண் புகுந்தேன்
நீசனா மென்னைத் தேடினீரே
காசினியிலன்பு கூர்ந்து
என் பாவம் போக்க எடுத்தீர் இறைவா
ஈனக்கோலமதை
என்னதானிதற்கீடு செய்குவேன்
அன்னையே விளம்புவீரே
தூரமாய்க கிடந்தே தொல்லைகளடைந்தே
தூயா உமை மறந்தேன்
தூக்கினீர் என்னைச் சேற்றினின்றே
தேற்றினீரும்மாவியாலே
விண்ணை நீர் மறந்தீர் விரோதியாமெனையே
விண்ணில் சேர்த்திடவே
வேண்டுதல் கேளும் வேந்தனே
அருள் தேவனே சகாயனே
பாவத்தின் கூலி மரணமாம் பயத்தை
ஜெயித்தவர் யேசுகோமான்
ஜீவனும் சமாதானமுமீந்து
தேவனின் சமூகமீந்தார்
மாயமாம் உலகின் வேஷத்தை வெறுத்தேன்
மன்னா உன் அன்பினாலே
சொன்னீரே மகிமையில் சேர்ப்பதாய்
உன்னதா உம் வாக்கை நம்பி
Details
- Numeric ID
- 3701
- Song ID
- ealaiyai-meeta-easuvea-swamy-lyrics-song-chords-ppt
- Views
- 9
- Downloads
- 0
- Source
- Open