El Rohi Ennai Kaanbavar எல்ரோகி என்னைக் காண்பவர்

எல்ரோகி என்னைக் காண்பவர்
Unknown
PPT
Lyrics

Lyrics

என்னைக் காண்பவர், என்னைக் காப்பவர், என்னைக் காண்பவரும் நீரே, என்னைக் காப்பவரும் நீரே, என்னை ஆளுகை செய்பவரும் நீரே,(2) எல்ரோகி என்னைக் காண்பவர், எல்சாலி என் அரணானவர், எனக்காக யாவையும் செய்து முடிப்பவர், என் சொந்தமானீரே, என் பந்தமானீரே, எற அரணும் கோட்டையும் நீரே, என்னை தேடித் வந்தீரே, என்னை மீட்டுக் கொண்டீரே, அநாதி சினேகத்தால் அணைத்துக் கொண்டீரே (2) மாய்நிறை உலகிலே மாறாத அன்பு உண்டு, மாசற்ற உம் தூய அன்பு. மனிதர்கள் தள்ளினாலும் மாறாத கிருபை தந்து, மறுபடியும் நிலை நிறுத்தும் அன்பு (2) என்னென்று நான் சொல்லுவேன், உம்மையே பாடிடுவேன் என்றென்றும் நன்றி சொல்லுவேன், உம்மையே துதித்திடுவேன். தாயின் கருவினிலே தோன்றிட்ட நாள்முதலாய் உம் சித்தம் என்மேலே வைத்தீர். உம்மை விட்டு வழி விலகி வெகுதூரம் சென்றபோதும் மீண்டும் என் பெயர்சொல்லி அழைத்தீர் (2) அழைத்தவரின் உம் கரத்தில் என்னையே தந்திடுவேன். உம் சித்தம் செய்திடவே வாழ்வையே அர்ப்பணித்தேன்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8108
Song ID
el-rohi-ennai-kaanbavar-lyrics-songs-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open