ELUNTHAR IRAIVAN எழுந்தார் இறைவன்

எழுந்தார் இறைவன்

Lyrics

எழுந்தார் இறைவன்,-ஜெயமே ஜெயமெனவே எழுந்தார் இறைவன். விழுந்தவரைக் கரையேற்றப்,-பாவத் தழுந்து மனுக்குலத்தை மாற்ற,-விண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற, செத்தவர் மீண்டுமே பிழைக்க,-உயர் நித்திய ஜீவனை அளிக்கத்,-தேவ பக்தர் யாவரும் களிக்க. கருதிய காரியம் வாய்க்கத்,-தேவ சுருதி மொழிகளெல்லாம் காக்க,-நம் இரு திறத்தாரையும் சேர்க்க. சாவின் பயங்கரத்தை ஒழிக்கக்,-கெட்ட ஆவியின் வல்லமையை அழிக்க,-இப் பூவின்மீது சபை செழிக்க. ஏதுந் தீவினை செய்யாத் தூயன்,-எப் போதுமே நன்மைபுரி நேயன்,-தப் பாது காத்திடும் நல்லாயன்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7200
Song ID
elunthar-iraivan-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
0
Downloads
0