ELUNTHARULUM YESU SWAMI எழுந்தருளும் ஏசு சுவாமி
எழுந்தருளும் ஏசு சுவாமி
Lyrics
எழுந்தருளும் ஏசு சுவாமி
விழுந்தலகை அழிந்தொழியத்
தொழுஞ் சுரரும் வரல் ஆச்சே
இஸ்திரீகள் கந்தவர்க்கம் எடுத் தேந்தி, பிரேதலங்கா
ரத்தின முறை நாடி, இதோ! ஆசரிக்க வந்தாரே.
மகதலா ஊர் மரியாள் மகிழ்ந்து தரிசித் தேற்ற,
அகமகிழ்ந்தப் போஸ்தலர்கள் அதிசயித்துப் போற்ற.
பாடுபட்டு மரித்தடக்கப் பட்ட தினம் மூன்றாச்சே,
ஏடுமுட்ட வரைந்த தெல்லாம் நிறைவேறி முடித்தாச்சே
முத்திரையும் காவல்களும் மூடிய கல்லதும் நீங்கி,
சத்துருக்கள் நடுநடுங்கித் தயங்கி மனங் கலங்க.
வேதாளம் நடுங்கி விழ, விண்ணோர் திரண்டு தொழ,
பாதாளம் இடிந்து விழப், பராபரனே, எழுந்தருளும்.
விஸ்தார உலகமதில், மெய்யான திருச்சபையில்,
தோத்ர சங்கீர்த்தனம் எந்நாளும் உண்டாக.
Details
- Numeric ID
- 7196
- Song ID
- eluntharulum-yesu-swami-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0