En Aathumavae Karththarai Nee Sthothari என் ஆத்துமாவே கர்த்தரை நீ ஸ்தோத்தரி
என் ஆத்துமாவே கர்த்தரை நீ ஸ்தோத்தரி
Lyrics
என் ஆத்துமாவே கர்த்தரை நீ ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே அவர் பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி
அவர் செய்த சகல உபகாரங்களை
நீ மறவாமலே ஸ்தோத்தரி
1.உன் அக்கிரமங்கள் எல்லாம் அவர் மன்னித்து
உன் நோய்களை குணமாக்கினார்
உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு
உன்னை கிருபையால் முடிசூட்டினார்
தம் நன்மையினால் உன் வாயை
அவர் திருப்தியாக்கினார்
கழுகுக்கு சமானமாக
உன் வயதை திருப்பினார்
2. பூமிக்கு வானம் எத்தனை உயரமோ
அவர் கிருபையும் பெரிதானதே
மேற்குக்கும் கிழக்குக்கும் உள்ள தூரம்போல்
உன் பாவத்தை விலக்கினாரே
ஒரு தகப்பன் இரங்குவது போல்
அவர் உனக்கும் இரங்கினார்
நீ மண்ணென்று அறிந்த பின்பும்
அவர் நினைவு கூர்ந்திட்டார்
Details
- Numeric ID
- 4875
- Song ID
- en-aathumavae-karththarai-nee-sthothari-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1