En Adaikalamae En Pugalidamae என் அடைக்கலமே என் புகலிடமே
என் அடைக்கலமே என் புகலிடமே
Lyrics
என் அடைக்கலமே என் புகலிடமே நன்றி நன்றியையா
என் உயிருள்ள நாளெல்லாம் நன்றி நன்றி ஐயா – 2
என் தேவன் என்றும் பெரியவரே
என்னை நீர் நினைப்பதற்கு தகுதி ஏதும் இல்லையப்பா
நிமிஷம் தோறும் விசாரிக்க
என்மேல் அன்பு கூர்ந்திட தகுதி ஏதும் இல்லையப்பா
ஆனாலும் நேசித்தீரே ஆனாலும் உயர்த்தினீரே – 2
நன்றி ஐயா – 2
1. அழுகையின் பள்ளத்தாக்கினிலே
உருவ நடந்து சென்றோமே
மேய்ச்சலுள்ள இடமாக்கி
ஆடுகளாலே நிரப்பினீரே
பள்ளத்தாக்குகள் எல்லாமே
தானியத்தாலே மூடினீரே
நன்றி ஐயா.. நன்றி ஐயா – 2
– என் உயிருள்ள
2. தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம்
செழிப்பான தேசத்தில் கொண்டு வைத்தீர்
வற்றாத நீரூற்றாய் மாற்றி ஐயா
செழிப்பான தோட்டமாய் ஆக்கினீரே
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திச் சென்று
ஆத்துமாவைத் தேற்றினீரே – நன்றி ஐயா
3. காற்றையும் மழையையும் பார்க்கவில்லை
ஆனாலும் வாய்காலை நிரப்பினீரே
அதிசயங்கள் காணச் செய்து
இதயமெல்லரம் மகிழ செய்தீர்
சத்துருக்களெல்லாம் முறியடித்து
ஜெயத்தின் மேல் ஜெயம் தந்தீரைய்யா – நன்றி ஐயா
Details
- Numeric ID
- 3078
- Song ID
- en-adaikalamae-en-pugalidamae-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1