En Aiyaa Dinam Unai Song என் ஐயா தின…

என் ஐயா தினம் உனை நம்பி நான்

Lyrics

என் ஐயா தினம் உனை நம்பி நான் இருப்ப தறியாயோ மன தேங்கும் என் கலி நீங்கும் படி நல் பாங்கு புரியாயோ அன்னை யிடத்தில் என்னை உருவதாய் வகுத்தவா கிறிஸ்தையா எனதையா அருள் செய்யாதது மெய்யா இது குற்றத்தால் உனைக்கிட்ட என் மனம் கூசி நாணுதே என்தன் கோதும் நான் செய்த தீதும் மனதில் கூடத் தோணுதே சுற்றும் உலகச் சத்துருப் பகை சூழக் காணுதே சுருதி மொழி உறுதி தனைக் கருதி வந்தேன் பொறுதி அருள் உன்னை அல்லாமல் பின்னை வேறெனக் குதவி இல்லையே என துற்ற ஜனமும் சுற்றத் தோர்களும் உரிமை இல்லையே பின் எவரிடம் போவேன் சொல் அது பெரிய தொல்லையே பேசும் விசு வாசம் வளர் நேசக் கதிர் வீச அருள் அத்தனே உன்றன் ரத்தத்தால் எனை ஆற்றித் தேற்றையா தேவ ஆவியாகிய ஈவெனும் உன தருளை ஊற்றையா நித்தனே என்றன் குற்றத்தை எல்லாம் நீக்கி ஆற்றையா நேசா பவ நாசா மறை வாசா ஏசு ராசா அருள்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
406
Song ID
en-aiyaa-dinam-unai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
9
Downloads
0
Source
Open