En Jeevan Pogum Song பாமாலை: 394 என் ஜீவன் போகும்

பாமாலை: 394 என் ஜீவன் போகும்

Lyrics

1.என் ஜீவன் போகும் நேரம் சமீபம் வந்ததே ; பேரின்ப அருணோதயம் , இதோ! விடிந்ததே ; ராக் கால மோசம் நீங்கும் வின் சுடரொளியில் ; மா அருள் ஜோதி வீசும் பேரின்ப தேசத்தில். 2.ஆ, நேச ஜீவ ஊற்று என் அருள் நாதரே ! ஈண்டுண்ணும் ஜீவ தண்ணீர் அங்காழி போலாமே ; பேரன்பின் பெருவெள்ளம் பாய்ந்தோடும் மோட்சத்தில் ; மா அருள் ஜோதி வீசும் பேரின்ப மோட்சத்தில்; 3. அன்போடும் நீதியோடும் என் சுக துக்கமும் ஆண்டென்னைப் பாதுகாத்து வந்தார் எந்நேரமும் ; ஆ! போற்றுவேன் தெய்வன்பை ஆனந்த கடலில் ; மா அருள் ஜோதி வீசும் பேரின்ப தேசத்தில் . 4. நல் நித்திரை செய்து பின்பு மாசற்றெழும்புவேன் ; ன் மீட்பரை நான் கண்டு ஆனந்தம் அடைவேன் ; ராஜாதி ராஜன் என்னை அழைக்கும் நேரத்தில் மா அருள் ஜோதி வீசும் பேரின்ப தேசத்தில் . 5. தன் ஆடையைப் பாராமல் பர்த்தாவின் முகத்தை பத்தினி நோக்குமாறு , நான் ஜீவ கீரடத்தை நோக்காமல் , மீட்பர் மாண்பை பார்ப்பேன் அவ்வேளையில் ; இம்மானுவேலே ஜோதி பேரின்ப தேசத்தில்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5126
Song ID
en-jeevan-pogum-song-chords-ppt
Views
0
Downloads
0