En Kaalangal Song Pas. Zac Robert காலங்கள் கடந்து போனதே

காலங்கள் கடந்து போனதே

Lyrics

காலங்கள் கடந்து போனதே என் இயேசய்யா உம்மைத் தெரிந்து கொள்ளாமல் நேரம் வீணானதே -(2) உம்மை அறிந்து கொள்ளாமல் வாழ்வு வீணானதே பரலோக ராஜனே பார்போற்றும் தேவனே – (2) இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா இனிமேலும் உம்மை விட மாட்டேன் – இந்தப் பாவி நான் இனிமேலும் உம்மை விட மாட்டேன் – காலங்கள் கடந்து 1) நான் செய்த பாவங்கள் கொஞ்சமல்லவே நான் செய்த துரோகங்கள் கொஞ்சமல்லவே – (2) ஒப்புக்கொடுத்தேன் உம்மிடத்திலே கண்ணீர் வடித்தேன் நான் உம்மிடத்திலே – (2) நீர் சிந்திய இரத்தத்தினால் தூய்மையாகினேன் நீர் பட்ட காயத்தினால் குணமாகினேன் – (2) மன்னிக்கும் தேவனே நீதி சொல்லும் ராஜனே – (2) இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா இனிமேலும் உம்மை விட மாட்டேன் – இந்தப் பாவி நான் இனிமேலும் உம்மை விட மாட்டேன் – காலங்கள் கடந்து 2) மன்றாடி ஜெபித்த என்னை ஏற்றுக் கொண்டீரே மனதினில் அமைதி தந்து வாழ வைத்தீரே – (2) பாலைவனத்தில் நீரூற்றினீர் சோலைவனமாய் வந்து வாசம் பண்ணினீர் – (2) தந்தையாய் என்னை வந்து தேற்றி விட்டீரே சிந்தையல்ல உன் நினைவாய் மாற்றி விட்டீரே – (2) சீயோனின் ராஜனை எந்நாளும் பாடுவேன் இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா இனிமேலும் உம்மை விட மாட்டேன் – இந்தப் பாவி நான் இனிமேலும் உம்மை விட மாட்டேன் – காலங்கள் கடந்து 3) கர்த்தருக்கு மகிமை என்று நம்பி வந்தவரை தேவன் வழி நல்லது என்று தேடி வந்தவரை – (2) தாழ்ச்சியுடனே ஒப்புக்கொடுத்தால் தயவுடனே உம்மை தாழ்பணிந்தால் – (2) எந்நாளும் கூட இருந்து காப்பவர் நீரே தீராத தாகத்தையும் தீர்ப்பவர் நீரே – (2) கானானின் தேசத்தின் அன்பான தேவனே இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா இனிமேலும் உம்மை விட மாட்டேன் – இந்தப் பாவி நான் இனிமேலும் உம்மை விட மாட்டேன் – காலங்கள் கடந்து காலங்கள் கடந்து போனதே-Kalangal kadandhu ponathe

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7316
Song ID
en-kaalangal-song-lyrics-chords-ppt-pas-zac-robert
Views
1
Downloads
1