En Kanmalaiyum Meeparumana என் கன்மலையும் மீட்பருமான
என் கன்மலையும் மீட்பருமான
Lyrics
என் கன்மலையும்
மீட்பருமான கர்த்தாவே
என் எண்ணங்கள் என் சொற்கள்
உகந்ததாகட்டும்
1.துணிகர பாவ கிரியை
மேற்கொள்ள முடியாது
வசனம் தியானிப்பதால்
வாழ்வேன் பரிசுத்தமாய்
இயேசைய்யா இரட்சகரே
இரத்தத்தால் கழுவினீரே
2.வார்த்தையின் வல்லமையால்
உயிர்ப்பிக்கப்படுகின்றேன்
பாதையில் நடப்பதினால்
ஞானம் பெறுகின்றேன்-இயே
3.இதயம் மகிழ்கின்றது
வசனம் உட்கொள்வதால்
கண்கள் மிளிர்கின்றன
வார்த்தையின் வெளிச்சத்தினால்-இயே
4.தங்கம் பொன்னைவிட
அதிகமாய் விரும்புகிறேன்
தேனின் சுவையை விட
சுவைத்து மகிழ்கின்றேன்-இயே
Details
- Numeric ID
- 5672
- Song ID
- en-kanmalaiyum-meetparumaana-karthave-songs-lyrics-chords-ppt-jebathotta-jeyageethangal-vol-39
- Views
- 0
- Downloads
- 0