Lyrics
என் மனமே உன்னை மறப்பாரோ?
தேவன் உன்னை மறந்து போவாரோ ? – 2
துயரங்கள் எல்லாமே மறைய செய்வாரே
ஆனந்த தைலத்தை உன் மேல் பொழிவாரே – 2
துதிக்க வைப்பாரே.. உன்னை அலங்கரிப்பாரே
இடிந்து போனதெல்லாம்.. உயிர்த்தெழும்ப செய்வாரே -2
1. வாதிப்பின் சத்தம் கேட்ட.. உன் எல்லை எல்லாமே
வர்த்திப்பின் பாடல் சத்தம்.. இன்று முதல் கேட்குமே-2
குறுகிப்போவதில்லை..
நீ சிறுமை அடைவதில்லை – 2 (…துதிக்க)
சீர்ப்படுத்தினாரே ஸ்திரப்படுத்தினாரே
பலப்படுத்தினாரே நிலை நிறுத்தினாரே
சீர்ப்படுத்தி உன்னை உயர்த்தி வைத்த தேவன்
இந்தப்புதிய ஆண்டில் அலங்கரிப்பாரே – 2
2. விசாரிக்க யாருமின்றி.. தள்ளுண்ட உன்னையே
ஆரோக்கியம் வரப்பண்ணி.. ஆளுகை தருவாரே – 2
இடிந்த அலங்கத்தை (அலங்கம் உன்னை)..
அவர் அரண்மனை ஆக்கிடுவார் – 2 (…துதிக்க)
Details
- Numeric ID
- 2486
- Song ID
- en-maname-unnai-marappaaro-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0