En Ullan Kavarum Song என் உள்ளங் கவரும் நீர் மரித்த
என் உள்ளங் கவரும் நீர் மரித்த
Lyrics
என் உள்ளங் கவரும் நீர் மரித்த
இன்பக் குருசண்டை இன்னும் நெருங்கிட
என் பாவம் போக்கவே ஈட்டியால் குத்துண்டு
இரத்தம் தண்ணீர் வழிந்தோடும் விலாவண்டை
உந்தன் மகா இன்ப சத்தம் நான் கேட்டவன்
உமதாச்சரிய அன்பை உணர்ந்தவன்
எந்தையே நானும்மைச் சேர்ந்தவனாயினும்
இன்னும் நெருங்கி நான் உம்மண்டை சேர்ந்திட
சுத்தக் கிருபையின் வல்லமையால் என்னை
முத்திரியும் உமக்கூழியம் செய்திட
அத்தனே உம்மில் நல் நம்பிக்கையாய் உந்தன்
சித்தமே என் சித்தமாகப் பிழைத்திட
உந்தனடிதனில் உறைந்து தனித்து
ஓர் மணி நேரம் கழிப்பதே பாக்கியம்
என் தேவனே அதி நேசமாய் உம்முடன்
இன்ப சம்பாஷணை செய்வதே ஆனந்தம்
அம்பரா மரண ஆழி தாண்டும் வரை
அறிய முடியா அன்பின் ஆழம் உண்டு
என் பரனே உந்தன் அன்பின் ஆழத்தை நான்
இம்மையில் கூடியமட்டும் அறிந்திட
Details
- Numeric ID
- 7384
- Song ID
- en-ullan-kavarum-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0