En Yesuvae என் இயேசுவே என் நேசரே

என் இயேசுவே என் நேசரே

Lyrics

என் இயேசுவே என் நேசரே நீர் செய்த நன்மைகள் ஏராளமே நன்றியோடு உம்மை துதிக்கிறேன் நாள்தோறும் உம்மை துதிக்கிறேன் நீர் செய்த நன்மைகள் ஏராளமே நடத்தின பாதைகள் அதிசயமே 1. தயங்கின போது உந்தனின் கிருபை தாங்கினதை என்னில் உணர செய்தீர் நெருக்கத்தின் போது உந்தனின் அன்பு நெருக்கமானதை ருசிக்க செய்தீர் தகப்பன் தன் பிள்ளையை சுமப்பது போல இந்த நாள்வரையும் சுமந்து வந்தீர் 2. உந்தனின் அன்பின் ஆழத்தை அறிய உம் சமூகம் என்னை கொண்டு வந்தீர் உந்தனின் மகிமை என்னிலே விளங்க உம்மாவியாலே என்னை நிறைத்தீர் உந்தனின் வார்த்தையால் தினம் என்னை போஷித்து உன்னத அனுபவம் எனக்கு தந்தீர் 3. தாழ்விலே என்னை கண்ணோக்கி பார்த்து தயவால் என்னை உயர்த்தி வைத்தீர் தகுதியே இல்லா என் நிலை அறிந்து நீரே தகுதியாய் எனக்காய் நின்றீர் இன்று நான் காணும் மேன்மைகள் எல்லாம் உந்தனின் கரங்களால் எனக்கு தந்தீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7868
Song ID
en-yesuvae-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
5
Source
Open