En Yesuvea Neer Kalvari என் இயேசுவே நீர் கல்வாரி மலையில்
என் இயேசுவே நீர் கல்வாரி மலையில்
Lyrics
என் இயேசுவே நீர் கல்வாரி மலையில்
தொங்கியே ஜீவனை ஈந்தீர்
மாந்தர்க்கு மீட்பை
இரத்தத்தால் தந்தீர்
மாறாத அன்பால் சிறந்தீர் -2
1. முள்முடி சிரசில் அழுத்திடவே
இரத்தம் ஆறாக ஓட -2
வாரால் அடி பட்டீர் மாந்தருக்காய்
வாதை மிக அடைந்தீர் -2
2. சிலுவையின் பாதை தெரிந்தெடுத்தே
சஞ்சலம் துன்பம் ஏற்றீர்
வான் புவி நடுவினில் தொங்கினீரே
வையகம் மீட்டிடவே
கள்ளர்கள் மத்தியில் கள்ளன் போலானீர்
குற்றமில்லா இயேசுவே
எல்லாம் முடிவடைந்தது என்று கூறி
ஆவியை ஒப்படைத்தீர்
Details
- Numeric ID
- 7105
- Song ID
- en-yesuvea-neer-kalvari-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0
- Source
- Open