Lyrics
எனது நேசர் என்னோடுண்டு
இனியும் தோல்வி எனக்கு இல்லை
எனது இரட்சகர் என்னில் உண்டு
இனியும் வெட்கம் எனக்கு இல்லை
தோல்விகள் என்னை சூழ்ந்தாலும்
தொடர்ந்து அவரில் ஓடிடுவேன்
கலக்கம் என்னில் வந்தாலும்
கலங்கிடாமல் சென்றிடுவேன்
கர்த்தர் என் மேய்ப்பரே
இனி குறைவே எனக்கில்லையே
எனக்கு எதிராய் உருவாகும்
ஆயுதம் ஒன்றும் வாய்க்காதே
எனது பக்கம் ஆயிரங்கள்
விழுந்தாலும் என்னை அணுகாதே
கர்த்தர் என் தஞ்சமே
இனி பயமே எனக்கில்லையே
என்னோடே போர்செய்த மனிதர்களை
தேடியும் காணாமல் இருப்பேனே
வெட்கம் அடைந்த தேசத்திலே
கீர்த்தியாய் என்றும் வாழ்வேனே
கர்த்தர் என் பட்சமே
இனி கலக்கமே எனக்கில்லையே
தடைகளை என்றும் உடைக்கிறவர்
எனக்கு முன்னே செல்லுகிறார்
யுத்தங்கள் என்மேல் எழுந்தாலும்
பயப்படாமல் அமர்ந்திருப்பேன்
கர்த்தர் என் சேனையே
இனி தடையே எனக்கில்லையே
Details
- Numeric ID
- 470
- Song ID
- enadhu-nesar-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0