Enakkoruvar Irukkindraar எனக்கொருவர் இருக்கின்றார்

எனக்கொருவர் இருக்கின்றார்
Unknown
Lyrics

Lyrics

எனக்கொருவர் இருக்கின்றார் – அவர் என்னையும் நேசிக்கிறார் காட்டினிலே அலைந்த என்னை கருணையாய் தேடுகின்றார் அவர் தாம் இயேசு; அவர் தாம் இயேசு அவர் தாம் இயேசு; அவரிடம் பேசு – 2 கானகத்து ஆட்டினைப் போல் வழிதப்பித் திரிந்தேனே மேய்ப்பன் அவர் தேடி வந்து என்னையும் ஏற்றுக் கொண்டார் – அவர் தாம் கடும் புயலும் பெருங்காற்றும் மோதியே தாக்கினாலும் அலைகடல் மேல் நடந்தவரின் கரம் எனக்காதரவே – அவர் தாம் என்னை அவர் தெரிந்ததினால் மன்னரை அறிந்தேனே பரத்தில் என்னை சேர்த்திடுவார் பரிசுத்தம் அடைந்திடுவேன் – அவர் தாம் மேகங்கள் மேல் அவர் வருகை வேகமாய் நெருங்கிடுதே அன்பருடன் சேர்ந்திடவே ஆயத்தமாகிடுவோம் – அவர் தாம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3082
Song ID
enakkoruvar-irukkindraar-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0