Lyrics
எனக்கு உம் கிருபை போதுமே – என் நேசரே
எனக்கு உம் கிருபை போதுமே – 2
கவலைகள் நிறைந்த துன்ப உலகிலே – 2
எனக்கு உம் கிருபை போதுமே
1. துணையில்லா ஒரு மாட புறா போல்
தவிக்கும் என்னை சேர்த்திட வாரும் – 2
நாதனின் வருகை தாமதமானால் – 2
விழாமல் காத்திடுமே – என்னை – 2 (எனக்கு)
2. சிகிச்சைக்கு ஒரு வைத்தியம் இல்லை
ஆறுதல் அடைய இடமும் இல்லை – 2
உமது வழியும் கிருபை வசனமும் – 2
மண்ணில் என் ஆறுதலே – இந்த – 2 (எனக்கு)
3. சிங்கத்தின் குகையில் தள்ளினாலும்
அக்கினியில் என்னை இழுத்தெறிந்தாலும் – 2
உள்ளம் கலங்கும் நேரங்களெல்லாம் – 2
விழாமல் காத்திடுமே – என்னை – 2 (எனக்கு)
Details
- Numeric ID
- 3087
- Song ID
- enaku-um-kirubai-podhume-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0