Engal Kudumbathin Devanae எங்கள் குடும்பத்தின் தேவனே
எங்கள் குடும்பத்தின் தேவனே
Lyrics
வாரத்தின் முதலாம் நாளில்
உம்மை தேடி வந்தோம்
(எங்கள்) வாழ்கையின் ஆதாரம் நீரே
உந்தன் முகத்தை காண வந்தோம்
எங்கள் குடும்பத்தின் தேவனே
உமக்கே நன்றி ராஜா
எங்கள் வாழ்கையின் நாயகனே
உமக்கே நன்றி ராஜா
சுக பெலன் ஜீவனை தந்து
வாழ வைப்பவரே
குறைவுகள் அனைத்தையும் நீக்கி
நன்மைகள் அளிப்பவரே
எங்கள் காணிக்கையை ஏற்று கொள்ளும்
எங்கள் தகப்பனே
எங்கள் தேவைகளை சந்திக்கவே
நீர் போதுமானவரே
அனுதின மன்னாவை தந்து
வழுவாமல் காப்பவரே
தடுமாறி விழுந்த போதும்
திரும்ப மன்னித்தீரே
உம் பாதத்திலே கூடி உள்ளோம்
எங்கள் இயேசுவே
நாங்கள் சாட்சியாக வாழ்ந்திடவே
உம் வார்த்தைகள் போதுமே
Details
- Numeric ID
- 751
- Song ID
- engal-kudumbathin-devanae-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1