Engka Patai Ithu Yesu எங்க படை இது இயேசு

எங்க படை இது இயேசு

Lyrics

எங்க படை இது இயேசு படை வெற்றி நடை போடும் ஜீவ படை – 2 அல்லேலூயா சொல்லி சொல்லி துதிக்கும் படை எரிகோவை ஒரு நொடியில் இடிக்கும் படை – 2 இந்த படை போதுமா இன்னொரு படை வேணுமா சாத்தானை ஜெயிக்க எங்க படை போதுமே – 2 ஜெபிச்சே வியாதிகளை சொஸ்தமாக்குவோம் பாட்டுப் பாடியே பேய்களை விரட்டியடிப்போம் – 2 சத்தியத்தின் ஜனங்களை ஆதாயப்படுத்துவோம் – 2 வைராக்கியமாய் இயேசுவுக்காய் வாழ்ந்துக் காட்டுவோம் வீடு நடைபோடு வரும் ராஜப்படை காடு மேடு கடந்து வரும் தெய்வப்படை – 2 வீடு நிலம் சொத்துக்களை மறந்த படை – 2 இயேசுவுக்காய் தியாகமாய் வாழும் படை – 2 எதிரியின் சூழ்ச்சிகளை முறியடிப்போம் எதிர்த்து வரும் சவால்களை சமாளிப்போம் – 2 தோல்வி கண்டு ஒரு போதும் துவள மாட்டோம் இலக்கை நோக்கி பந்தயத்தை தொடர்ந்திடுவோம் எங்க ராஜா இயேசு ராஜா எங்கக் கொடி சிலுவைக் கொடி எங்க ராஜயம் பரலோக ராஜ்யம் எங்கள் கோஷம் அல்லேலூயா – 2 வெற்றி வெற்றி எங்களுக்கே வெற்றி – 4

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4191
Song ID
engka-patai-ithu-yesu-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1