Engum Pukalvaenae எங்கும் புகழ்வேனே என்னேசுவை
எங்கும் புகழ்வேனே என்னேசுவை
Lyrics
எங்கும் புகழ்வேனே என்னேசுவை நான்
என்றும் புகழ்வேனே இன்றும்வரை
போற்றிப் புகழ்வேனே உள்ளம் கனிந்தே.
1. வானிலும் அவர் பூதலத்திலும்
மகிமையில் சிறந்தோரே (2) திவ்ய.
கானக மீதில் கனிவுடன்
காத்தணைத்தார்- தன் நேசத்தாலே-2
2. ஒன்றிலுமவர் குன்றிடாது
வென்று ஜெயித்தாரே தான் (2) எனக்காய்
நன்றியுடனவர் பாதம் சரணடைந்தேன்
அன்பால் நிறைந்தே
3. இம்மையிதினில் இன்று வரையும்
அன்னைபோல் நின்றே (2) எந்தன்
செம்மையாகவே தாங்கி நடத்திடுமென்
தயாள தேவா
4. மேலுலகின் மகிமையான
பூரண சந்தோஷம் (2) மீட்பின்...
கருணையுடன் பரனெனக்கருளுகிறார்
நித்தம் நித்தமுமே
Details
- Numeric ID
- 6813
- Song ID
- engum-pukalvaenae-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0
- Source
- Open