Enna Bakkiyam Yevarkundu என்ன பாக்கியம், எவர்க்குண்டு

என்ன பாக்கியம், எவர்க்குண்டு
Unknown
Lyrics

Lyrics

என்ன பாக்கியம், எவர்க்குண்டு இந்தச் சிலாக்கியம்? விண்ணவரும், புவிமேவும் முனிவர்களும், மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன் — என்ன 1. வானகந் தானோ – அல்லதிது – வையகந் தானோ? ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள் கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது — என்ன 2. சாமியைக் கண்டேன் – மகானந்தம் – சாலவுங்கொண்டேன், காமரு தேங்கனி வாய்கள் துடிப்பதும், கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும் — என்ன 3. அன்னமும் நீயே – கிடைத்தற்கருஞ் சொன்னமும் நீயே; மின்னறு மேகத் திருக்கை துறந்தையோ? மேதினி தன்னை ரட்சிக்கப் பிறந்தையோ? — என்ன 4. போதும் இவ்வாழ்வு – பரகதி – போவேன் இப்போது; ஏதேன் என்ற பரதீசும் வந்திட்டது; எண்ணில்லாத செல்வம் என் கையில் கிட்டுது — என்ன

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1420
Song ID
enna-bakkiyam-yevarkundu-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0