Ennai Jeeva Baliyaai என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்
என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்
Lyrics
என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்
ஏற்று கொள்ளும் இயேசுவே
அன்னை தந்தை உந்தன் சன்னதி முன்னின்று
சொன்ன வாக்குத்தத்தமல்லாது இப்போது
1. அந்தகாரத்தினின்றும் பாவப் பேய்
அடிமைத்தனத்தினின்றும்
சொந்த ரத்தக்கிரயத்தால் என்னை மீட்ட
எந்தையே உந்தனுக்கிதோ படைக்கிறேன்
2. ஆத்ம சரீரமதை உமக்கு
ஆதீனமாக்கி வைத்தேன்
பாத்ரமதாயதைப் பாவித்துக் கொள்ளக்
காத்திருக்கிறேன் கருணை செய்தேவா
3. நீதியினாயுதமாய் அவயவம்
நேர்ந்து விட்டேனுமக்கு
ஜோதி பரிசுத்தராலயமாகவே
சொந்தமாய்த் தந்தேன் எந்தன் சரீரத்தை
Details
- Numeric ID
- 5404
- Song ID
- ennai-jeeva-baliyaai-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open