Ennai marava yesu natha

என்னை மறவா இயேசு நாதா

Lyrics

என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் 1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அரும் துணையே பாதைக்கு நல்ல தீபமிதே 2. பயப்படாதே வலக்கரத்தாலே பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம் பாசம் என்மேல் நீர் வைத்ததினால் பறிக்க இயலாதெவருமென்னை 3. தாய் தன் சேயை மறந்து விட்டாலும் மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம் வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில் உன்னதா எந்தன் புகலிடமே 4. உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத் தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம் அக்கினியின் மதிலாக அன்பரே என்னைக் காத்திடுமே 5. என்னை முற்றும் ஒப்புவித்தேன் ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம் எப்படியும் உம் வருகையிலே ஏழை என்னைச் சேர்த்திடும் 6. திக்கற்றோராய் கைவிடேனே கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம் நீர் அறியா யாதும் நேரிடா என் தலைமுடியும் எண்ணினீரே 7. உன்னை தொடுவோன் என் கண்மணியை தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம் அக்கினியின் மதிலாக அன்பரே என்னைக் காத்திடுமே 8. உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம் வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம் பறந்திடுமே உம் நாமத்திலே பரனே எனக்காய் ஜெயக் கொடியே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6341
Song ID
ennai-marava-yesu-natha
Views
1
Downloads
1