Lyrics
என்னை நேசிக்கின்றாயா?
என்னை நேசிக்கின்றாயா?
கல்வாரி காட்சியை கண்டபின்னும்
நேசியாமல் இருப்பாயா - (2)
1. பாவத்தின் அகோரத்தை பார்
பாதகத்தின் முடிவினை பார்-(2)
பரிகாச சின்னமாய் சிலுவையிலே
பலியான பாவி உனக்காய்-(2)
2. பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாவி உன்னை அழைக்கிறேன் பார்-(2)
உந்தன் பாவம் யாவையும் சுமப்பேன் என்றேன்
பாதம் தன்னில் இளைபாறவா-(2)
3. வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால்-(2)
தேடி இரட்சிக்க பிதா என்னை அனுப்பிடவே ஓடிவந்தேன் மானிடனாய்-(2)
உம்மை நேசிக்கின்றேன் நான்
உம்மை நேசிக்கின்றேன் நான்
கல்வாரி காட்சியை கண்டபின்னும் நேசியாமல் இருப்பேனோ- (2)
Details
- Numeric ID
- 2941
- Song ID
- ennai-naesikkinraayaa-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0