Ennai Pelaththaal Nirappum என்னைப் பெலத்தால் நிரப்பும்

என்னைப் பெலத்தால் நிரப்பும்
Unknown
PPT
Lyrics

Lyrics

என்னைப் பெலத்தால் நிரப்பும் அனலாய் மாற்றும் தூய தேவ ஆவியால் என்னை அன்பினால் நிரப்பும் தூயனாய் மாற்றும் உந்தன் அன்பின் ஆவியால் உம் நாமம் ஓங்கட்டும் அல்லேலூயா என்றென்றும் மகிமை அல்லேலூயா உம் நாமம் பாடுவேன் அல்லேலூயா அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா-2 1. சத்துரு சேனையை அகற்றிட சத்தியரே பெலன் ஈந்திடுமே -2 பெலவீனன் என்னையும் தயவாய் தாங்கிடும் உந்தனின் கரத்தினாலே -2 2. யோர்தானைப் போலவே துன்பங்கள் ஓயாது என்னையே மோதிட்டாலும் கடலை வழியாக மாற்றிய தேவனே என்னையும் நடத்திடுமே 3. தண்ணீரை ரசமாக மாற்றிய மன்னவனே மண்ணாம் என்னையுமே உம்மைப்போல மாற்றிடும் உம்மோடு வாழ்ந்திட உம் புகழ் பாடிடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7159
Song ID
ennai-pelaththaal-nirappum-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open