Enno Pala Ninaivaalum என்னோ பல நினைவாலும்

என்னோ பல நினைவாலும்

Lyrics

என்னோ பல நினைவாலும் நீ உன்னை அலைக்கழிப்பாய். மன்னர்கள் மன்னவன் ஆகிய யேசு நின் மன்னவராய் இருக்கையிலே. 1.அன்னை யிடத்துருவாய் உன்னை அமைத்த தந்தை அல்லவோ– பின்னும் ஆகாரமும் உடையும் ஜீவனும் அளிப்பதவர் அல்லவோ 2.மாதானவள் சேயை ஒரு வேளை மறந்தாலும் – உன்னை மறவோம் ஒருகாலும் என வார்த்தை கொடுத்தாரே 3.இஸரேலரைக் காப்போர் உறங்கிடுவோர் என நினையேல் – அவர் நிசமாக உன் வல பாகத்தில் நிழல் ஆவர் என்றறிவாய். 4.சிங்கங்கள் பட்டினியாய் இருக்கக் கண்டேன் தேசம் எங்கும் சுற்றிப் பார்த்தும் – தேவ சேயர்கள் பட்டினியாகக் காணேன் என்ற திவ்ய உரையும் பொய்யாமோ 5.தேகமும் கெட்ட உலகமும் பேயும் திரண்டு நினைப் பொருதாலும் – அதை ஜெயித்த யேசு நின் மன்னவராகையில் சிந்தனை வேறென்ன நினைக்கு 6.தேவ பிதா நின் பிதாவும் இயேசு நின் சிநேகிதரும் சுத்தாவி – நின்றன் தேற்றர வாளனும் ஆவதைப்பார்க்கிலும் தேவை நினக்கொன்றும் இல்லையே.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2731
Song ID
enno-pala-ninaivaalum-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
4
Source
Open