Enno Pala Song என்னோ பல நினைவாலும்

என்னோ பல நினைவாலும்

Lyrics

என்னோ பல நினைவாலும் நீ உன்னை அலைக்கழிப்பாய். மன்னர்கள் மன்னவன் ஆகிய யேசு நின் மன்னவராய் இருக்கையிலே. அன்னை யிடத்துருவாய் உன்னை அமைத்த தந்தை அல்லவோ? – பின்னும் ஆகாரமும் உடையும் ஜீவனும் அளிப்பதவர் அல்லவோ? மாதானவள் சேயை ஒரு வேளை மறந்தாலும் – உன்னை மறவோம் ஒருகாலும் என வார்த்தை கொடுத்தாரே இஸரேலரைக் காப்போர் உறங்கிடுவோர் என நினையேல் – அவர் நிசமாக உன் வல பாகத்தில் நிழல் ஆவர் என்றறிவாய் சிங்கங்கள் பட்டினியாய் இருக்கக் கண்டேன் தேசம் எங்கும் சுற்றிப் பார்த்தும் -தேவ சேயர்கள் பட்டினியாகக் காணேன் என்ற திவ்ய உரையும் பொய்யாமோ? தேகமும் கெட்ட உலகமும் பேயும் திரண்டு நினைப் பொருதாலும் – அதை ஜெயித்த யேசு நின் மன்னவ ராகையில் சிந்தனை வேறென் நினைக்கு? தேவ பிதா நின் பிதாவும் இயேசு நின் சிநேகிதரும் சுத்தாவி – நின்றன் தேற்றர வாளனும் ஆவதைப் பார்க்கிலும் தேவை நினக் கொன்றும் இல்லையே.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7387
Song ID
enno-pala-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
0
Downloads
0