Ennodu Kooda Irupaar

என்னோடு கூட இருப்பார் இயேசு
Unknown
PPT
Lyrics

Lyrics

என்னோடு கூட இருப்பார் இயேசு என்னோடு கூட இருப்பார் எந்நாளும் கூட இருப்பார் இயேசு எப்போதும் கூட இருப்பார் கலங்கிட மாட்டேன் நான் கலங்கிட மாட்டேன் கைவிட மாட்டார் இயேசு கைவிடமாட்டார் – என் 2 1. சோதனை நேரத்தில் கூட இருப்பார் சோர்ந்திடும் வேளையில் தாங்கி நடத்துவார் 2 சாத்தானை ஜெயிக்க பெலன் தருவார் சாய்ந்து இளைப்பாற மார்பிலணைப்பார் 2 2. செய்திடும் காரியம் வாய்த்திட செய்வார் சேனையின் கர்த்தராய் கூட இருப்பார் 2 மனுஷரின் தயவை உண்டு பண்ணுவார் நானிலம் போற்றிட உயர்த்தி மகிழ்வார் 2 3. ஆவியின் கனியால் அலங்கரிப்பார் வல்லமை வரங்களை பெருகப்பண்ணுவார் 2 போக்கிலும் வரத்திலும் கூட இருப்பார் பரலோக வாழ்வை எனக்குத்தருவார் 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5422
Song ID
ennodu-kooda-irupaar-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open