Lyrics
எந்தன் இதய கானம் என்றும் உன்னைப் பாடும்
இயேசுவே என் தலைவனென்று என்றும் எடுத்துக் கூறும்
காலையில் பண்பாடும் பறவைக் கூட்டங்கள்
சோலையில் நின்றாடும் மரத்தின் தோட்டங்கள்
மாலையில் எம்மீது வீசும் தென்றல்கள்
மருதம் மகிழ சேரும் மழையின் துளிகள்
நீரினில் நீந்திடும் மீனின் ஓட்டங்கள்
நிலத்தினில் வாழ்ந்திடும் விலங்கின் கூட்டங்கள்
எல்லாம் உன் புகழ்பாடுதே
உன் சொல்லாலே உயிர் வாழுதே
தெய்வமே என்றாகும் மழலை மொழிகளும்
தேயா அன்பாகும் தெய்வ மாந்தரும்
கோயிலில் நின்றோங்கும் புகழ்ச்சிப் பாக்களும்
பூமியில் நற்சேவை ஆற்றும் தொண்டரும்
நீதியும் நேர்மையும் கேட்கும் கூக்குரல்
நியாயமும் தர்மமும் தேடும் ஏக்கங்கள்
எல்லாம் உன்னைச் சாட்சி சொல்லுதே
என் உள்ளம் என்றும் உன்னைப் பாடுதே
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 4008
- Song ID
- enthan-ithaya-ganam-endrumlyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0