Enthan Yesuvin Anbathaiye Song எந்தன் இயேசுவின் அன்பதையே
எந்தன் இயேசுவின் அன்பதையே
Lyrics
எந்தன் இயேசுவின் அன்பதையே
எண்ணும் வேளையில் ஆனந்தமே
கடந்த நாட்களில் கைவிடாமலே
கண்ணின் மணிபோல காத்ததினால்
மனப்பூர்வமாய் துதிப்பேன் மகிழ்வுடனே
மன்னன் கிறிஸ்தேசுவையே
அழைத்த பாதையில் தளர்ந்த வேளையில்
அன்பின் மொழியால் பேசினாரே
புது ஜீவனும் நிறைவாய் அளித்ததினாலே
புண்ணியனைப் போற்றிடுவேன்
வறுமை வியாதியின் வலிய தோல்வியும்
வந்த வேளையில் தாங்கினாரே
ஜெய கீதமே தினமும் எவ்வேளையிலும்
ஜெயத்துடன் பாடிடுவேன்
நெகிழ்ந்த கரங்களை உயிர்த்து இதுவரை
இழந்த வரங்களும் ஈந்ததினால்
அவர் சேவையை புரிந்து கனம் மகிமை
அவருக்கே செலுத்திடுவேன்
நிறைந்த ஜோதியாய் திறந்த வானிலே
நீதி சூரியன் தோன்றிடுவார்
மறு ரூபமே அடைந்தே பறந்திடுவேன்
மட்டற்ற பேரின்பமுடன்
Details
- Numeric ID
- 6509
- Song ID
- enthan-yesuvin-anbathaiye
- Views
- 1
- Downloads
- 1