Ephphatha

எப்பத்தா

Lyrics

எப்பத்தா என்று சொல்லி திறப்பவரே என் வாழ்வின் கதவை திறந்திடுமே 1. வானத்திலானாலும் ஆழத்திலானாலும் அடைபட்டதெல்லாம் திறக்கும் ஒரு வார்த்தை ஒன்று உம் வாயிலிருந்து புறப்பட்டால் உடன் திறக்கும் 2. செங்கடலானாலும் யோர்தானானாலும் உம்மை கண்டால் உடன் விலகும் எரிகோவானாலும் பர்வதமானாலும் உம் முன்னே தகர்ந்து விழும் 3. குருடான கண்கள் அடைப்பட்ட செவிகள் நீர் தொட்டால் உடன் திறக்கும் ஊமையான வாய்கள் மந்தமுள்ள நாவுகள் நீர் சொன்னால் உம்மை துதிக்கும் 4. பாவ கட்டானாலும் சாப கட்டானாலும் உம் ( இயேசு ) நாமத்தினால் அவிழும் சிறை கதவானாலும் கல்லறையானாலும் உம் வல்லமையால் திறக்கும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8015
Song ID
ephphatha-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open