Epothum Nathanai Sothiri எப்போதும் நாதனை ஸ்தோத்திரி

எப்போதும் நாதனை ஸ்தோத்திரி
Unknown
Lyrics

Lyrics

எப்போதும் நாதனை ஸ்தோத்திரி – நாள் தப்பாமல் ஆண்டவன் பொற்பாதத்தைப் பணிந்து அனுபல்லவி தப்பான பாதைகளிற் சிக்காமல் நீ விலகி — எப் சரணங்கள் 1.இப் பூதலத்தில் நீ மனுஜன்ம மாகினை ஏதுக்கென் றுள்ளத்தில் எண்ணிக்கையாய் நினை அப்பா என்னப்பா வென்றழைக்கப் பிறந்தனை — எப் 2.சண்டாள னாகினை உன் தோஷம் நீங்கவே சாயுச்ய வாழ்வுடன் சந்தோஷம் ஓங்கவே மண்டல விண்டலன் உன்னைக் கைத் தாங்கவே – எப் 3.கிறிஸ்தேசு நாயகன் கிருபை உன் பூரணம் கெம்பீரமாக நீ சொல் நாமோச்சாரணம் பரிச்சேதம் ஜாலம் வேண்டாம் தாழ்மை முதற்காரணம் — எப் 4.வீட்டிலும், காட்டிலும், வெளியிலும், வழியிலும், பாட்டிலும், படிப்பிலும், தேட்டிலும், செழிப்பிலும், நாட்டிலும், நகரிலும், ஞான முயற்சியிலும் -எப் 5.தம்பூர், கின்னரங்கள், ஜாலர், வீணை. மிரு தங்கம், தப்லாவுடன் சங்கீத நாதமாய் அம்பல சித்தனை அன்போடு பாடி யாடி -எப் 6.துன்பங்கள் சூழினும் துக்கத்திலாழினும் ஈபமறிந்திலேன் என்றே நீ தாழினும் கண்பஞ்சடையச் சாவுக்கென்றே நீ வீழினும் — எப்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4140
Song ID
epothum-nathanai-sothiri-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0