Eppadi Paaduven Naan எப்படிப் ப…
எப்படிப் பாடுவேன் நான்
Lyrics
எப்படிப் பாடுவேன் நான்
என் இயேசு எனக்குச் செய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன்
ஒருவழி அடையும்போது
புதுவழி திறந்த தேவா
திறந்த வாசலை என் வாழ்க்கையில்
அடைக்காத ஆண்டவரல்லோ
எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை
அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே
எப்போதும் பாடிடுவேன்
கடந்து வந்த பாதையில்
கண்மணிபோல் காத்திட்டீர்
கடுகளவும் குறை வைக்காமலே
அதிகமாய் ஆசீர்வதித்தீர்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 1047
- Song ID
- eppadi-paaduven-naan
- Views
- 19
- Downloads
- 3