Ethanai Thiral Song எத்தனை திரள் என் பாவம்
எத்தனை திரள் என் பாவம்
Lyrics
எத்தனை திரள் என் பாவம் என் தேவனே
எளியன்மேல் இரங்கையனே
நித்தம் என் இருதயம் தீயதென் பரனே
நிலைவரம் எனில் இல்லை நீ என் தாபரமே
1.பந்தம் உன்மேல் எனக்கில்லை என்பேனோ
பணிந்திடல் ஒழிவேனோ
சுத்தமுறுங் கரம்கால்கள் விலாவினில்
தோன்றுது காயங்கள் தூய சிநேகா
2.என்றன் அநீதிகள் என் கண்கள் முனமே
இடைவிடாதிருக்கையிலே
உன்றன் மிகுங் கிருபை ஓ மிகவும் பெரிதே
உத்தம மனமுடையோய் எனை ஆளும்
3.ஆயங் கொள்வோன்போல் பாவ ஸ்திரீபோல்
அருகிலிருந்த கள்ளன்போல்
நேயமாய் உன் சரண் சரண் என வணங்கினேன்
நீ எனக்காகவே மரித்தனை பரனே
4.கெட்ட மகன்போல் துட்டனாய் அலைந்தேன்
கெடு பஞ்சத்தால் நலிந்தேன்
இட்டமாய் மகன் எனப் பாத்திரன் அல னான்
எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தமே அப்பனே
Details
- Numeric ID
- 7381
- Song ID
- ethanai-thiral-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0