Eththanai Kodi Nanmaigal எத்த…

எத்தனை கோடி நன்மைகள்

Lyrics

எத்தனை கோடி நன்மைகள் எந்தன் வாழ்வில் நீர் செய்ததை எப்படிச் சொல்லிப் பாடுவேன் 1. உளையான பாவச் சேற்றில் உழன்று கிடந்த என்னை தூக்கிய விதம்தனை நினைத்தேன் பாழான நிலத்தினிலும் ஊளையிடும் குழிதனிலும் கண்டுபிடித்தென்னை தெரிந்துகொண்டு தாங்கி நடந்தின விதம்தனை நினைத்து 2. கனவீனமான என்னை கனவானாய் மாற்றும்படி கனமான சிலுவையை சுமந்தீர் கலவாரி சிலுவையிலே இரத்தம் சிந்தி எனை மீட்டு நித்திய மகிமைக்கு முத்திரை தந்து உத்தமரே உம் மகிமையை நினைத்து 3. ஒரு தந்தையைப் போல தோளின் மேலே சுமந்து சென்றதைச் சொல்லவா ஒரு தாயைப் போல மார்போடென்னை அணைத்துக் கொண்டதைச் சொல்லவா என் கண்ணிரை மாற்றினதைச் சொல்லவா கவலை மாற்றினதைச் சொல்லவா எத்தனை நாவுகள் எனக்கிருந்தாலும் அத்தனை நாவுகள் உமை துதித்தாலும் போதாது என் தேவா அப்பா உம் கிருபையை எண்ணிப் பாடுவேன் என் நாதா 4. சப்தஸ்வரங்கள் முழங்கட்டும் மேள தாளங்கள் ஒலிக்கட்டும் கீதவாத்தியங்கள் இசைக்கட்டும் பரிசுத்தவான்கள் பாடட்டும் பரலோக ராஜ்யம் திறக்கட்டும் பரலோக ராஜ்யம் திறக்கட்டும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8356
Song ID
eththanai-kodi-nanmaigal-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
3
Source
Open