Ethu Vendum Sol Nesanae Song எது வேண்டும் சொல் நேசனே
எது வேண்டும் சொல் நேசனே
Lyrics
எது வேண்டும், சொல், நேசனே,-உனக்
கெதுவேண்டாம், என் நேசனே?
1. மதிவாட, மனம்வாட, மயக்கங் கண் ணிறைந்தாட
மதுபான முண வேண்டுமோ?-அன்றித்
துதிபாடும் உலகோருன் புகழ்பாடி மகிழ்ந்தாடச்
சுத்த ஜலம் வேண்டுமோ?
2. வாதாடி நகையாடி, வழிகளில் விழுந்தாடி
மதுவுண்டு கெடவேண்டுமோ?-அன்றித்
தாதாவே, கனவானே, தனவானே யெனச் சாற்றத்
தண்ணீ ருண்ண வேண்டுமோ
3. பகைதந்து, பழிதந்து, பரியாசந் தரு மது
பான முண வேண்டுமோ?-அன்றித்,
தகை கொண்ட கதியேற, அருளொடு புகழ்பெறத்
தண்ணீ ருண்ண வேண்டுமோ?
4. சண்டை, காயம், கந்தை, அமளி, வேதனையாதி
தருங் குடி வெறி வேண்டுமோ?-அன்றிப்
பண்டை வேதஞ் சொன்னபடி மோட்சம் பெற ஜல
பானமது வேண்டுமோ?
5. இரத்தக்கண், பெருந்துக்கம், ஏக்கம்,நடுக்கம், வெட்கம்,
இவைதருங் குடி வேண்டுமோ?-அன்றித்,
திரத்துக்கும் அறிவுக்குஞ் சுகத்துக்கு மிடமான
தெளிந்த தண்ணீர் வேண்டுமோ?
Details
- Numeric ID
- 7388
- Song ID
- ethu-vendum-sol-nesanae-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0