Ezhunthituveer Neer Vaaliparae எழுந்திடுவீர் நீர் வாலிபரே

எழுந்திடுவீர் நீர் வாலிபரே
Unknown
Lyrics

Lyrics

எழுந்திடுவீர் நீர் வாலிபரே - நாமும் இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் இன்னும் கொஞ்சம் நேரம் இயேசு வரும் நேரம் நித்திரை செய்யாமல் உழைத்திடுவோம் எழுந்திடுவோம் நாம் எழுந்திடுவோம் இயேசுவின் வீரரே எழுந்திடுவோம் அனுதினம் அழிந்திடும் பாரதம் காத்திட தூசியை உதறி எழுந்திடுவோம் 1. விழித்திருங்கள் நீர் கன்னியரே - நல்ல விளக்குகள் எரிய எண்ணெய் ஊற்றுவீர் மணவாளன் வருகையின் சத்தம் கேட்பதாலே கன்னியர்கள் நாமும் எழுந்திடுவோம் 2. நித்திரைகள் வேண்டாம் முதியோரே - நல்ல நேரம் வேளை தன்னை நிதானிப்பீரே தீர்க்கர் முற்பிதாக்கள் செப்பிய உரைகள் தினம் நிறைவேற கண்டதில்லையோ 3. சஞ்சலங்கள் வேண்டாம் தாய்மாரே - நல்ல தைலாபிஷேகம் செய்ய வருவீரே புதையல்கள் போன்ற புத்திரராம் பரணி நேசர் பாதத்தில் உடைத்திடுவீர் 4. இந்து தேசம் வெல்ல முயன்றிடுவோம் - நல்ல இயேசு முன்னே செல்வார் பயம் இனியேன் என்ன தடை வரினும் இயேசு நாமம் ஜெயிக்கும் இன்றே யாவரும் எழுந்திடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2163
Song ID
ezhunthituveer-neer-vaaliparae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0