Geetha Saththaththaal Kaempira கீத சத்தத்தால் கெம்பீரமாகவே,
கீத சத்தத்தால் கெம்பீரமாகவே,
Lyrics
கீத சத்தத்தால் கெம்பீரமாகவே,
கீர்த்தனம் செய்வேன் கர்த்தரை என்றுமே
ஆனந்தமாகவே ஆர்ப்பரிப்புடனே – நித்
யானந்தரை நிதமும் பாடுவேன்
1. வீணையினாலும் தம்புருவினாலும்
கின்னரத்தாலும் என் நாவினாலுமே – 2
சுரமண்டல தொனியும் முழங்க
சீரேசு நாதனை சிறப்பாய் பாடுவேன்
2. பத்து நரம்பும் போதாதென்றெண்ணியே
மெத்தவும் மனம் துதியால் நிறைந்தே – 2
உத்தம ஆசீர் உள்ளத்தில் பெற்றிட
உன்னத தேவனை உயர்த்தி துதிப்பேன்
3. நானிலந்தன்னில் நல் ஏசுவின் எல்லா
நன்மைகளையும் ஒவ்வொன்றாய் எண்ணியே – 2
நன்றியினாலென் இதயம் பொங்கிட
நடனமாடியே ஆவியில் மகிழ்வேன்
4. தேவ ஆவியால் இன்னிசை நாதங்கள்
ஏக சத்தமாய் இசைந்திலங்கிட
தேவ மகிமை மேகமாய் இறங்க
தேவாதி தேவனை புகழ்ந்து போற்றுவேன்
5. தேவ சேவைக்காய் மகிமை சாட்சியாய்
ஜீவன் சுகம் என் பெலன் யாவுமீந்தே
மேள வாத்திய மங்கள கீதங்கள்
எக்காள தொனியாய் எங்கும் முழங்கவே
6. ஜெயங்கொண்டோனாய் சீயோன் சிகரத்தில்
ஜெய வீரனாம் ஏசுவுடனே நான்
தேவ சுரமண்டலம் கரத்தில் ஏந்தியே
ஜெயத்தின் கீதங்கள் களிப்பாய் பாடுவேன்
Details
- Numeric ID
- 3712
- Song ID
- geetha-saththaththaal-kaempira-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open