Gunapadu Paavi Keerthanai Song Tamil Christian Keerthanai Song குணப்படு பாவி தேவ
குணப்படு பாவி தேவ
Lyrics
குணப்படு பாவி தேவ
கோபம் வரும் மேவி இப்போ
கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்
காலமிருக்கையில் சீலமதாக நீ
கர்த்தனை நீ மறந்தாய்அவர்
கற்பனையைத் துறந்தாய்
பக்தியின்மை தெரிந்தாய் பொல்லாப்
பாவ வழி திரிந்தாய்
புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடிவா
உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார்
துக்கமடையாயோ பாவி
துயரமாகாயோ
மிக்கப் புலம்பாயோ மனம்
மெலிந்துருகாயோ
இக்கணம் பாவக் கசப்பை யுணராயோ
தக்க அருமறைப் பக்கந் தொடராயோ
தாவீ தரசனைப்போல் தன்னைத்
தாழ்த்தும் மனாசேயைப்போல்
பாவி மனுஷியைப்போல் மனம்
பதைத்த பேதுருபோல்
தேவனுக்கேற்காத தீமைசெய்தேனென்று
கூவிப் புலம்பு நல் ஆவியின் சொற்படி
உன்னை நீ நம்பாதே இவ்
வுலகையும் நம்பாதே
பொன்னை நீ நம்பாதே எப்
பொருளையும் நம்பாதே
தன்னைப் பலியிட்டுத் தரணி மீட்டவர்
நின்னையும் ரட்சிப்பார் அனைவரைப்பற்று
Details
- Numeric ID
- 7566
- Song ID
- gunapadu-paavi
- Views
- 0
- Downloads
- 0