Illathavaigalai Iruppavai Pola இல்லாதவைகளை இருப்பவை போல
இல்லாதவைகளை இருப்பவை போல
Lyrics
இல்லாதவைகளை இருப்பவை போல
அழைக்கும் தெய்வமே
முடியாதவைகளை துவங்கிய கரங்களால்
நிறைவேற்றும் தெய்வமே
என் விருப்பங்கள் நிறைவேற்றுவீர்
என் தேவைகள் யாவும் தருவவீர்
ஆமேன் ஹல்லேலூயா (4)
காலங்கள் தாமதம் ஆனால் என்ன
கனவுகள் கரைந்து போனால் என்ன (2)
மரித்தோரை உயிர்ப்பிக்கும் தெய்வமன்றோ
அற்புதம் காண செய்வீர் (2)
என் விருப்பங்கள் நிறைவேற்றுவீர்
என் தேவைகள் யாவும் தருவவீர்
ஆமேன் ஹல்லேலூயா (4)
வியாதியின் வேதனை பெருகினாலும்
மருத்துவர் அறிக்கையால் கலங்கினாலும் (2)
பதறாதே விசுவாசி என்று உரைத்தீர்
சுகவாழ்வை துளிர்க்கச் செய்வீர் (2)
என் விருப்பங்கள் நிறைவேற்றுவீர்
என் தேவைகள் யாவும் தருவீர்
ஆமேன் ஹல்லேலூயா (4)
வெறுமையின் வாழ்க்கையால் கசந்தாலும்
அவமானத்தால் வெட்கி நின்றாலும் (2)
திரளான மீன்களைத் தந்திடுவீர்
படகுகள் நிரம்பச் செய்வீர் (2)
என் விருப்பங்கள் நிறைவேற்றுவீர்
என் தேவைகள் யாவும் தருவீர்
ஆமேன் ஹல்லேலூயா (4)
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 8018
- Song ID
- illathavaigalai-iruppavai-pola-lyrics-song-chords-ppt
- Views
- 16
- Downloads
- 1