Immattum Jeevan Thantha பாமாலை: 79 இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை

பாமாலை: 79 இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை

Lyrics

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த எண்ணமாய்த் தோத்தரிப்போமாக நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து நற்சுகம் மேவவும் அற்புதமாகவும். — இம்மட்டும் 1. காலம்சொல் போல் கழியும், தண்ணீரைப்போல் வடியும், கனாவைப் போலேயும் ஒழியும்; வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும், மண்னின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது; கோலப் பதுமைக்கும், நீர்க குமிழிக்கும், புகைக்குமே கொண்ட உலகத்தில் அண்டபரன் எமைக் கண்டு கருணைகள் விண்டு தயவுடன். —- இம்மட்டும் 2. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம் ; பரம பாதையைத் தொடர்ந்தோம் ; வலிய தீமையை வென்றோம் , நலியும் ஆசையைக் கொன்றோம், வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம் ; கலிஎன்ற தெல்லாம் விண்டோம் , கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்; காய்ந்த மனதொடு பாய்ந்துவிழு கணம் சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் — இம்மட்டும் 3. சனசேதம் வருவிக்கும் , கேடுகட்கோர் முடிவு தந்து, நொறுங்கினதைக் கட்டிக் கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக் கண்ணோக்கி எல்லார்மேல் அன்றன்று தினமும் அருள் உதிக்கச் செய்து , தமது தேவ சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர் மைந்தனால் எங்களை இந்த வினோதமாய் — இம்மட்டும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5177
Song ID
immattum-jeevan-thantha-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0