Indrithinam Un Arul Yeeguvai இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய்

இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய்
Unknown
Lyrics

Lyrics

இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் , இயேசுநாதையா , இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் அன்றுன் உதிரம் நரர்க் கென்று சிந்தி மீட்டெனை வென்றியுடன் ரட்சித்த நன்றி போலே எனக்கு 1. போன ராவில் என்னைக் கண் பார்த்தாய் பலவிதமாம் பொல்லா மோசங்களில் தற்காத்தாய் ; ஈன சாத்தான் எனையே இடர்க்குள் அகப்படுத்தி , ஊனம் எனக்குச் செய்யா துருக்கமுடன் புரந்தாய் 2. கையிட்டுக் கொள்ளும் , என்றன் வேலை யாவிலுமுன்றன் கடைக்கண் ணோக்கி , அவற்றின் மேலே , ஐயா , நின் ஆசீர்வாதம் அருளி , என் மனோவாக்கு மெய்யால் நின் மகிமையே விளங்கும்படி ஒழுக 3. எத்தனையோ விபத்தோர் நாளே தஞ்சம் நீ என எளியேன் அடைந்தேன் உன்றன் தாளே ; பத்தர் பாலனா , எனைப் பண்பாய் ஒப்புவித்தேன் , உன் சித்தம் எனது பாக்கியம் , தேவ திருக்குமாரா 4. பாவ சோதனைகளை வென்று , பேயுலகுடல் பண்ணும் போர்களுக் கெதிர் நின்று , ஜீவ பாதையில் இன்றும் திடனாய் முன்னிட்டுச் செல்ல , தேவ சர்வாயுதத்தைச் சிறக்க எனக் களித்து

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
138
Song ID
indrithinam-un-arul-yeeguvai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0