Indru Mudal Naan இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்

இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன் பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன் உனது பெயரை நான் உயர்த்திடுவேன் ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய் செல்லும் இடமெல்லாம் காவலாய் நான் இருப்பேன் சொன்னதை செய்திடுவேன் கைவிடவே மாட்டேன் நீ வாழும் இந்த தேசம் உனக்குத் தந்திடுவேன் பரவிப் பாய்கின்ற ஆறுகள் நீதானே நதியோரம் வளருகின்ற தோட்டமும் நீதானே வாசனை தருகின்ற சந்தனமும் நீதானே பத்தில் ஒரு பங்கு நீ கொடுத்தால் வானத்தில் பலகணிகள் திறந்திடுவேன் இடம் கொள்ளாதமட்டும் நிரப்பிடுவேன் வானத்து விண்மீன் போல ஒளி கொடுப்பாய் கடற்கரை மணலைப் போல பெருகிடுவாய் எதிரியின் வாசல்களை உரிமை ஆக்கிடுவாய் நீரண்டை வளருகின்ற செடியும் நீதானே மதில் மேல் ஏறுகின்ற கொடியும் நீதானே பகை நிறைந்த உலகத்திலே அன்பு கரம் நீட்டிடுவாய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5935
Song ID
indru-mudal-naan-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open