Ini Thamathamo Naadha Neer Varave இனி தாமதமோ நாதா நீர் வரவே
இனி தாமதமோ நாதா நீர் வரவே
Lyrics
இனி தாமதமோ நாதா நீர் வரவே
கோடா கோடி தூதர் சங்கமாய் மேகத்தில்
ஆ எத்தனை நாள் காத்து நான் பார்க்கணும்
. என் ஆத்ம நாதா உம் முகம் காணவே
1. நிலையில்லா உலகில் பல துன்பங்கள் ஆ!
பெரும் அலைகள் போல் புரள்கின்றதே
பாருலகத்திலே பெருகிடுதையோ
நாம் பரிதாபமாம் மன சஞ்சலங்கள் - வந்து
சேர்த்துக்கொள்ளும் என்னை நீர் வேகமாய்
இன்று நோக்குகிறேன்
உம்மை நான் ஏகனாய் - ஆ எத்தனை
நம்பிக்கையற்றே வாழ்கிறார் மனிதர்
இளைப்புள்ளோராய் இப்பாருலகில்
வியாகுல சிந்தை பெருகுவதாலே
நிர்ப்பந்தராய் கண்ணீர் விடுகின்றாரே
பூவில் அந்தகாரம் மூடுதென் நாதனே
அந்தோ சிந்திக்கையில் என்ன பரிதாபமோ
3. ஆதி விஸ்வாசம் தள்ளி அனேகர்
லோக சுகங்களை தேடுகிறார்
தியாகிகளான சகோதரர் கூட்டம்
பதவிகள் தேடி அலைகின்றாரே
ஐயோ விசுவாச ஜீவியம் கஷ்டமே
உம் வருகையில் நானும் வந்து சேரவே
4. நீதியின் சூர்யா இயேசு மகேசா
உதித்திட காலமாகிடுதே
உமது மகிமை நான் அணிந்திடவே
பொங்குதென்னுள்ளம் அனுதினமும்
தேவா காரிருள் முற்றுமே மாற்றியே
மாறி மின்னல் ஒளி இன்றுமே வீசவே
Details
- Numeric ID
- 6223
- Song ID
- ini-thamathamo-naadha-neer-varave-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open