Iniya Ikkaalai Vidikinra

இனிய இக்காலை விடிகின்ற

Lyrics

இனிய இக்காலை விடிகின்ற வேளை இனிய குரலில் நான் இயேசுவைப் பாடி இசையினால் துதித்தூ மகிழும் இவ்வேளை 1. தூதரும் நானும் சேர்ந்து துதித்துப் பாடும் இந்த வேளை நேயமாய் இயேசுவின் பாதம் அமர்ந்து நான் ஜெபிக்கும் வேளை புதுக்காலை புதுக்கிருபை புது நன்மை கிடைக்கும் வேளை 2. வான் காண் பறவை எல்லாம் வாழ்த்திப் பாடும் இந்த வேளை நீர் வாழ் உயிர்கள் எல்லாம் நீந்தி மகிழும் இவ்வேளை புதுக்காலை புதுக்கிருபை புதுநன்மை கிடைக்கும் வேளை 3. சிருஷ்டிகர் படைத்த எல்லாம் சிரம் தாழ்த்திப் பணியும் இவ்வேளை குடும்பமாய் அமர்ந்து உம் பாதம் துதித்து நான் ஜெபிக்கும் வேளை புதுக்காலை புதுக்கிருபை புது நன்மை கிடைக்கும் வேளை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8372
Song ID
iniya-ikkaalai-vidikinra-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
4
Source
Open